Tamil Sanjikai

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிலையை அமைத்தது யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இரவோடு இரவாக திடீரென அந்த சிலையை அங்கு அமைத்தது யார் என்ற குழப்பம் அ.தி.மு.க.வினர் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையம் முன் மாநகராட்சி இடத்தில் 1995-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு வலது புறம் இரவோடு இரவாக 7 அடி உயரமுள்ள பீடத்தில் 7 அடி உயர ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

சிலை அமைக்க மாநகராட்சி ஆணையர் தான் அனுமதியளிக்க வேண்டும் என்ற நிலையில், சிலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment