Tamil Sanjikai

துருக்கியில் பன்னெடுங்காலமாக நடந்து வரும் ஒட்டகச் சண்டைப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தப் போட்டிகளில் ஆயிரத்து 200க்கும் அதிகமான ஒட்டகங்கள் பங்கேற்றன. மேற்கு துருக்கியில் உள்ள செல்கக் ((Selcuk)) நகரத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்க அலங்கரிக்கப்பட்ட ஆண் ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டு சண்டையிட பணிக்கப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியம் மிக்க இந்தப் போட்டிகளைப் காண உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதனிடையே, ஒட்டகச் சண்டையை பாரம்பரிய விளையாட்டாக அறிவிக்கக் கோரி யுனெஸ்கோவிற்கு துருக்கி கடிதம் அனுப்பியுள்ளது.

0 Comments

Write A Comment