மிகவும் முக்கியமான நேரத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் போலீசார் கவனம் செலுத்துவதை தவிர்பதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சட்டம் - ஒழுங்கு, மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு, கோயில் மற்றும் திருவிழா போன்ற பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள், அலுவலக பணிக்காக மட்டுமே செல்போன் பயன்படுத்தலாம் எனவும், இந்த சுற்றறிக்கையை அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டிவைக்குமாறும், காவலர்களுக்குப் படித்துக் காண்பிக்குமாறும் காவல்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments