அதிமுக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜேந்திரன் ( வயது 62) . இவரது கார் விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் நிலை தடுமாறி மோதியதில் பலியானார். இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே எம்.பி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது.
சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இறந்த எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலும் கூறினார். எம்.பி. ராஜேந்திரன் இதற்கு முன் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேனாக இருந்துள்ளார். சிவி.சண்முகத்தின் ஆதரவாளர் ஆவார்.
மறைந்த அதிமுக எம்.பி எஸ்.ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.
0 Comments