ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த இஸ்ரேலிய முன்னாள் அமைச்சருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-96ம் ஆண்டில் இஸ்ரேலின் எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தவர் கோனன் செகேவ். இவர் நைஜீரியாவுக்கான ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்தாகக் கூறப்பட்டது. மேலும் அவர் ஈரானுக்காக உளவு பார்த்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து செகேவ் கைது செய்யப்பட்டு அவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செகவுக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments