டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி, அபராத தொகையின் அளவு, முன்பைவிட 10 மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், டெல்லியில் லாரி ஓட்டுனரான ராம் கிஷோருக்கு, புதிய வாகன சட்டத்தை மீறியதற்காக ரூ. 2,00,500 க்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது.
அவரின் வாகன விதிமீறல் பட்டியல் இதோ :
- வாகன எடை அளவு மீறல் - ரூ. 20,000 + ரூ. 36,000 (1 டன்னிற்கு ரூ. 2000 வீதம், மொத்தம் 18 டன்கள்)
- ஓட்டுனர் உரிமம் இல்லை - ரூ. 5,000
- பதிவு சான்றிதழ் இல்லை - ரூ. 10,000
- அனுமதி மீறல் - ரூ 10,000
- வண்டி பராமரிப்பின்மை - ரூ. 10,000
- காப்பீடு - ரூ. 4,000
- மாசு கட்டுபாட்டுச் சான்றிதழ் இல்லாததால் - ரூ. 10,000
- வண்டியில் சரியாக மூடப்படாத கட்டுமான பொருட்கள் - ரூ.20,000
- சீட் பெல்ட் அணியாமால் வண்டி ஓடியது - ரூ. 1,000
இதே போன்று, ராஜஸ்தான் லாரி ஓட்டுனர் பக்வான் ராமி - ற்கு, ரூ. 1,41,000 - ம், ஒடிசாவின் அசோக் ஜாதவ் - ற்கு ரூ 86.500 - ம் அபராதம் விதிக்கப்பட்டதுக் குறிப்பிடத்தக்கது.
0 Comments