பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்ந
தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் பிரபுதேவா தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து விழாவில் கலந்துகொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பத்ம விருது வழங்கி கவுரவித்தார்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு ராம்நாத் கோவிந்த் பத்ம விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளாருக்கும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராம்நாத் கோவிந்த் பத்ம விருது வழங்கி சிறப்பித்தார். இதே போல, மலையாள திரைப்பட உட்ச நட்சத்திரம் மோகன்லால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரங்களால் பத்ம விருதை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.
0 Comments