Tamil Sanjikai

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் இந்திய துணைராணுவ படையினர் 40 கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ள பாகிஸ்தானை கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதித்து நடப்போம் என்று தெரிவித்தார்.

0 Comments

Write A Comment