Tamil Sanjikai

தமிழில் பூந்தோட்டம் படத்தில் தேவயானி தங்கையாக . ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய் தங்கையாகவும், சூர்யா ஜோடியாகவும் நடித்து இருந்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும், சமீபத்தில் திரைக்கு வந்த மீசையை முறுக்கு படத்திலும் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை செலவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் கன்னட சினிமா துறையினர் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதை ஏற்று சிலர் பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் முன்னணி கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்கு உதவவில்லை என்று பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து மைசூருக்கு வந்த சிவராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “விஜயலட்சுமிக்கு எப்போதும் உதவி செய்துகொண்டு இருக்க முடியாது. அவர் சொல்வது உண்மையா என்று பார்க்க வேண்டும். உடலில் குறை உள்ளவர்களே கடினமாக உழைத்து தமது வாழ்க்கையை சிறப்பாக வாழ்கிறார்கள். நல்ல கை, கால்கள், மன நலம் உள்ளவர்களால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இயலாத ஒருவரை பார்த்தால் உதவி செய்ய தோன்றும். உதவும் உணர்வு உள்ளிருந்து வர வேண்டும்” என்றார்.

0 Comments

Write A Comment