Tamil Sanjikai

இமாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பகுதிகளான சிம்லா, மணாலி, நார்கண்டா, கல்பா மற்றும் சாங்கலா ஆகிய மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இங்குள்ள மரங்கள் எல்லாம் பனியால் சூழப்பட்டிருக்கும். தற்போது இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் சோலங்க் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டன. வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளும் பனியால் சூழப்பட்டுள்ள நிலையில் மரம், செடி, மீது பனி படர்ந்துள்ளது.

பனிப்பொழிவால் குளிர் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். பனியால் பள்ளத்தாக்கு முழுவதும் பஞ்சு படர்ந்து ரம்மியம் போல காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். வெள்ளியை உருக்கி கொட்டியது போன்று திரும்பிய பக்கமெல்லாம் பனி படர்ந்து காணப்படுகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் பனிக்கட்டியை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடி மகிழ்கின்றனர்.

0 Comments

Write A Comment