Tamil Sanjikai

53 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றதொரு கிரகம் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களைக் கண்டறிவதற்காக, டெஸ் எனப்படும் கோள்களைக் கண்டறியும் செயற்கைக்கோளை நாசா கடந்த ஆண்டு விண்ணில் ஏவியது.

இந்த செயற்கைக்கோளானது இதுவரை 10 வெளி கோள்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் பதினோறாவதாக ஒரு கிரகம் இருப்பதை டெஸ் கண்டுபிடித்துள்ளது.

Hd 21749c எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியைப் போல் 89 விழுக்காடு பெரியதாகவும், இது சுற்றி வரும் நட்சத்திரம் சூரியனைப் போல் 70 விழுக்காடு பெரியதாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்பரப்பு வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

0 Comments

Write A Comment