Tamil Sanjikai

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கான முன்னோட்ட சூழல் தொடங்கி உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் வாட்டுகிறது. பெரும்பாலான நகரங்களில் பகல் நேர வெப்பநிலையின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி உள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் தென்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் நிக்கோபார் தீவுகளில் மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளதை அடுத்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஜூன் 4-ந்தேதி முதல் 6-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதன் மூலம் தென்மாநிலங்களில் மழை பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment