Tamil Sanjikai

இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 -இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், திட்டமிட்டபடி முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில்தான் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நேற்று தெரிவித்தார்.

இதையடுத்து, இருநாட்டு வீரர்களும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக, வங்காளதேச வீரர்கள் சிலர் மாஸ்க் அணிந்த படி விளையாடி வருகின்றனர்.

0 Comments

Write A Comment