Tamil Sanjikai

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் சரிவர செயல்படுத்தவில்லை என்று கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்-லைனில் பட்டாசு விற்பனை செய்தால் தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த அறிவுரை வழங்கி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்கும் இணையதளங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment