Tamil Sanjikai

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய மன்னராக பதவியேற்றுள்ள நாருஹிட்டோவை சந்தித்தார். மன்னரின் அரண்மனையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க மன்னரும் ராணி மசாக்கோவும் டிரம்ப்பை கை குலுக்கி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து டோக்கியோவின் அகாசாகா அரண்மனையில் மன்னர் அளித்த சிறப்பு விருந்தில் டிரம்ப் பங்கேற்றார்.

இதன் பின்னர் அவர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக விவாதித்தார்.

0 Comments

Write A Comment