Tamil Sanjikai

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளநிலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகிய மூன்று பட்டப்படிப்புகளை மீன்வளப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.

மேலும், மீனவர்களின் குழந்தைகளுக்காக சிறப்புப் பிரிவின்கீழ் 8 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, இதில், மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்கள், மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஒரு இடம் என ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்வளப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment