Tamil Sanjikai

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு காலமானார். இதன் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் அதிமுகவினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள் . இதற்காக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் இன்று காலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் நோக்கி மவுன ஊர்வலம் நடத்தினார்கள் . ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுகவினர், பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர் . அதிமுக-வினர் ஊர்வலத்தைத் தொடர்ந்து, டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் அண்ணா சிலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலம் நடத்த உள்ளனர். இதேபோல, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரிக்க உள்ளனர்.

1 Comments

  1. #முதல் பாதி முழுவதும் ரோபோட்டிக்ஸ் , ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் , இயற்பியல் , புவியியல் வகுப்புகள் எடுக்கிறார்கள் இரண்டாம் பாதியில் ஆர்னித்தாலஜி (பறவைகள் குறித்த பாடம்) எடுக்கிறார்கள்# பாடங்கள் தெளிவாக நமக்கு புரிகிறதா ? நம் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டுமா ? இது முடியும் என்றால் கொஞ்சம் இல்லை ரொம்ப Costly யான Video Lecture என நாம் புரிந்து கொள்ளலாம் .

Write A Comment