Tamil Sanjikai

கூகுள் மேப்ஸ் வழங்கிய புதிய அப்டேட் மூலம் இனி ரூட் மேப் மட்டுமல்லாமல் ஆட்டோவில் செல்லும் போது ஆகும் பயணக் கட்டணம், ஆகியவற்றைக் காண முடியும்.

தற்போதைக்கு இந்த அப்டேட் டெல்லி மக்கள் மட்டுமே பெற முடியும்.

கூகுள் மேப்ஸ்-ல் உள்ள ‘public transport’ mode-ஐ தேர்வு செய்து விட்டு. அதன் பின்னர் ஆட்டோவில் பயணிக்க விரும்புபவர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் இடத்துக்கான ரூட் மேப், பயணக் கட்டணம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த அப்டேட் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கூடுதலாக 'cab mode' என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்துத் துறை போலீஸார் வழங்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வைத்தே டெல்லி கூகுள் மேப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் மேப்ஸ் மேனேஜர் விஷால் தத் கூறுகையில், “தற்போது பயணிகள் தங்கள் பயணத்துக்கான கட்டணம் தெரியாமல் அதிகப்படியான கட்டணத்தை அளித்து வருகின்றன. இதைத் தவிர்க்கவும், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடவும் இந்தப் புதிய அப்டேட் உதவும்” என்றார்.

தற்போது ஓர் ஆய்வு முறையாக டெல்லியில் மட்டும் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது அண்டை மாநிலங்களுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment