முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (நேற்று) சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை(இன்று) பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சரவையை முடிவு செய்யும் பணியில் பாஜக கட்சித் தலைமை இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இந்த நிலையில், "உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் தமக்கு மீண்டும் இடம் வேண்டாம்" என அருண் ஜேட்லி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில், தனது நீண்டநாள் நண்பரும், அரசியலில் உற்ற தோழருமான அருண் ஜேட்லியை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
0 Comments