Tamil Sanjikai

எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானமும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியது. எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.

சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இந்த விமானத்தை இயக்க தடை செய்யப்பட்டுள்ளதாக சீனா விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது . மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

0 Comments

Write A Comment