நேற்று முன் தினம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர், நடந்த இந்த கோர சம்பவம் பற்றி விளக்குவதற்காகவும், விவாதிப்பதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது.
பாராளுமன்ற நூலக அரங்கில் இந்த கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
0 Comments