வரும் அக்டோபர் மதம் 21 ஆம் தேதி நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த கங்காதரன் என்ற காவலர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments