பாகிஸ்தானில், 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குவதாகவும், இதில், 9 பயிற்சி முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்குச் சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, வாஷிங்கடனில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உயர் அதிகாரி ஒருவர், உலகளாவிய தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக கூறினார்.
புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கமே ஒப்புக்கொண்ட பிறகும், பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் இல்லை எனக் அந்நாட்டின் பிரதமர் கூறுவது, இருநாடுகளிடையே, போர் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி என்றும் அந்த அதிகாரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானில், பல்வேறு தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த, 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக கூறிய இந்திய அதிகாரி, அதில், 9 தீவிரவாத பயிற்சி முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்குச் சொந்தமானவை என்றும், தெரிவித்திருக்கிறார்.
இந்த 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்குவதாகவும், இந்திய அதிகாரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
0 Comments