தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை 6 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளிலும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதியிலும் வரும் வியாழக்கிழமை (18ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என இதுவரை பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை 6:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.
0 Comments