கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை, இணையதள தொடராக சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்.
படிக்கும் போதே கண் முன் காட்சியாக விரியும் நாவல் பொன்னியின் செல்வன். சோழர் வம்சம் குறித்த இந்த நாவல், சாகசம், காதல், வீரம் என பல்சுவைக் கூறுகளை உள்ளடக்கியது. இந்த நாவல் தற்போது MX Original Series தொடராக வெளியாகவுள்ளது. இந்த தொடரை நடிகர் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா இணைந்து தயாரிக்கிறார்.
தனது மே 6 எண்ட்ர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம், MX Original Series நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் அற்புதமான நாவல் என்று கூறியுள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த், இதை காட்சியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இந்த முடிவை தான் எடுத்ததாக தெரிவித்துள்ளார்
0 Comments