Tamil Sanjikai

கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில் மாநிலங்களின் வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு, முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டில் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் வருவாய் அதிகரித்ததால், ஜிஎஸ்டியின் கீழ் உள்ள விகிதங்கள் குறைக்கப்பட்டு, பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வருவாயை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டில், சராசரி வரி வருவாய் ஒரு மாதத்துக்கு 89 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக இருந்ததாகவும், நடப்பாண்டில் இது 97 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment