ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 - ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் வரும் 16ஆம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில், மதிய அரசின் இந்த திடீர் முடிவால் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments