Tamil Sanjikai

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல், இந்திய ஏற்றுமதி, இறக்குதி வங்கிக்கான அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 639 கோடி ரூபாய் செலவில் 13 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும், ஜம்மு காஷ்மீரில் 2 பல்கலைக்கழங்களும் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment