ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் ஜிஸ்கா பெரெல்லோ என்பவரை நேற்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால் 14 வருடங்களாக ஜிஸ்கா பெரெல்லோவை காதலித்து வந்துள்ளார். தனது தங்கை மரிபெல் மூலம் ஜிஸ்கா நடாலுக்கு பரீட்சையமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டிலுள்ள மல்லோர்காவில் உள்ள ஒரு கோட்டையில் 31 வயதான பெரெல்லோ, 33 வயதுடைய நடாலின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் 350 பேர் கலந்துகொண்டனர். 1975 முதல் 2014 வரை ஸ்பெயினின் மன்னரான ஜுவான் கார்லோஸ் கலந்துகொண்டவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
இந்த திருமணத்திற்கு, பிரபல நட்சத்திர சமையல் கலைஞர் குயிக் டகோஸ்டா பொறுப்பில் உணவுகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments