Tamil Sanjikai

சீக்கு, கிங் கோலி என்ற செல்லப் பெயர்களைக் கொண்ட விராட் கோலிக்கு “லிட்டில் பிஸ்கட்” என்று ஏபிடி வில்லியர்ஸ் புதிய பெயர் சூட்டியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் சதம் அடித்தார்.

இது அவரது ஐந்தாவது ஐபிஎல் சதமாகும். விராட் கோலியின் ஆட்டத்தைக் கண்டு வியந்த ஏபிடி வில்லியர்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் விராட் கோலியை லிட்டில் பிஸ்கட் என்று செல்லமாக அழைத்துள்ளார். மொயீன் அலியின் ஆட்டத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.

0 Comments

Write A Comment