Tamil Sanjikai

சென்னையில் வரும் 23ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளதால், இன்று காலை முதல் டிக்கர்ட் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் வினியோகம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகியது. டிக்கெட்டுகளை பெற ஆர்வம் காட்டிவரும் ரசிகர்கள் நேற்றிலிருந்து விடிய விடிய வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறைந்தபட்சமாக 1,300 ரூபாயில் தொடங்கி 2,500, 5,000, 6,500 என்ற விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. சேப்பாக்கம் மைதான வளாகத்தில் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0 Comments

Write A Comment