பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா வரும் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது, இதையடுத்து தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments