ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரம்ஜான் திருநாளுக்கு வாழத்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
0 Comments