அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டைன். இவருக்கும் அகைமி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கனவுகளோடும், கற்பனைகளோடும் மேற்கிந்திய தீவான செயின்ட் கிட்ஸ் தீவுக்கு தேனிலவு சென்றனர்.
நடைப்பயணம் அங்கு மேற்கொண்டபோது, சற்றும் எதிர்பாராத விதத்தில், செயல்படாமல் இருந்த ஒரு எரிமலை மீது கிளே சாஸ்டைன் தவறி விழுந்து அலறினார்.
அதைப்பார்த்து மனைவி அகைமி அதிர்ச்சியில் உறைந்து போனார். உதவிக்கு யாரும் அங்கு இல்லை.
ஆனாலும் அகைமி சுதாரித்துக்கொண்டு கணவரை கஷ்டப்பட்டு எரிமலையில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அதன்பின்னர் இரண்டு மைல் தொலைவுக்கு கணவரை தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தே மலையடிவாரம் வந்து சேர்ந்தார்.
மனைவி தன்னை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததை கிளேயால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரமித்துப்போனார்.
பின்னர் அகைமி, கணவரை புளோரிடா அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.
0 Comments