சென்னையைச் சேர்ந்த சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த பிரபு தாஸ் என்பவரது மகனுக்கு, 3 வயது முதல் வாயின் வலதுபக்கத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் காட்டியபோது, சிறுவனுக்கு கீழ் தாடையில் பற்கள் முளைப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் இதனை சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அந்த வயதில் சிறுவன் இதற்கு ஒத்துழைக்காததால் சிகிச்சை மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து, தற்போது சிறுவனுக்கு 7 வயது ஆன நிலையில், அவனது வாயின் வலது பகுதி முழுவதும் வீங்கியது. மேலும் அவனுக்கு வலியும் அதிகமாகவே, அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு தனியார் மருத்துவனையை அணுகினர். மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் நூற்றுக்கணக்கான பற்கள் முளைத்துள்ளதாக கூறினர்.
இதையடுத்து, 5 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அகற்றியுள்ளனர். மேலும், பற்கள் அதிகமாக வளராமல் தடுக்கவும் சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0 Comments