சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை அடித்தனர். அதனால் அங்கு பரபரப்பான சூநிலை ஏற்பட்டது.
தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இறங்கிய பேருந்தின் பிரேக் வயர் அறுந்ததால் பேருந்து தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments