தென் ஆப்பிரிக்காவில் வனஉயிரின புகைப்படக் கலைஞர் ஒருவர் காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
வன உயிரினங்களை புகைப்படம் எடுக்கும் ஸ்டீவ் பெய்ல்லி ((Steve Baillie)) என்ற இளைஞர், பலூலே என்ற வனப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வருவதை கண்டு, தரையில் அசையாமல் படுத்துக் கொண்டார். அப்போது அருகில் வந்த காட்டு யானை ஸ்டீவை கோபத்துடனும், பயத்துடனும் பார்த்தது. பின்னர் தனது துதிக்கையால் முகர்ந்து பார்த்து விட்டு அங்கிருந்து அகன்று சென்றது.
ஸ்டீவ் கூடுதலாக ஏதாவது அசைவை வெளிப்படுத்தியிருந்தால் யானை அவரைக் கொன்றிருக்கும் என அவரது நண்பர் தெரிவித்தார்.
0 Comments