3 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் சூட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி, பெண் குழந்தை குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மாவட்ட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். படிக்கும் போதே ஜப்பான் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியுள்ளார் அந்த மாணவி...
திருவள்ளூர் மாவட்டம், ஆர். கே. பேட்டை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுக்கு தொடர்ந்து பெண்குழந்தை பிறந்தால் ‘வேண்டாம் என பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி பெயர் வைத்தால் அடுத்து பிறகும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்று கிராமத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை. இந்த கிராமத்தைச் சேர்ந்த அசோகன, கௌரி தம்பதியருக்கு என்பவருக்கு சன்மதி யுவராணி என்ற இரண்டு பெண் குழந்தைகள், இந்த நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறக்க அதற்கு வேண்டாம் எனப் பெயரிட்டுள்ளனர்.
வேண்டாம் என்ற பெயர் கொண்ட அந்தப் பெண் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து வளர்ந்தார். பின்னர் சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் அரசு உதவித் தொகை மூலமாக பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்கள், மாணவிகளும் வேண்டாம் என தன் பெயரை சொல்லி கிண்டல் செய்கின்றனர் என்றும், தற்போதும் கல்லூரியில் படிக்கும்போதும் கிண்டல் செய்கின்றனர் என்றும் பெற்றோரிடம் தெரிவித்து வருந்தியுளார். அதற்கு அவரது பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வந்தனர்.
இந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவி, கல்லூரியில் நடந்த வளாகத் நேர்காணலில், தன்னால் உருவாக்கப்பட்ட, தானியங்கிக் கதவு குறித்து, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம், வேண்டாம் என்ற பெயர் கொண்ட அந்த மாணவியை தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளத்தில் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அந்த மாணவியை, பெண் குழந்தை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் மாவட்ட சிறப்புத் தூதுவராக நியமித்து வாழ்த்து தெரிவித்தார்.
0 Comments