விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல பெங்காலி நடிகை ரித்திகா சென் அறிமுகமாகிறார் விஜய் நரேன் இசையமைத்துள்ள டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இரண்டு வேடத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் காமெடி மற்றும் ஆக்சன் இரண்டும் கலந்து இருப்பதாகவும், முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குநர் சில்வா இந்த படத்தில் ஜாக்கிசான் பாணியில் சந்தானத்திற்கு காமெடியுடன் கூடிய ஸ்டாண்ட் காட்சிகள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும், இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்தானம், யோகிபாபு ஆகிய இருவரும் ஒரே படத்தில் இருப்பதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments