மேற்கு வங்க மாநில முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான பாரதி கோஷ், பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இரண்டு காரணங்களுக்காக பரவலாக விவாதிக்கப்பட்டிருக்கிறார். மாவோயிஸ்டுகள் அதிகாரமிக்க மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் எஸ்.பியாகவும், மிக முக்கியமாக, முதல்வர் மமதா பானர்ஜிக்கு அருகிலும் நீண்ட காலமாக அவர் பணியாற்றினார்.
மேற்கு வங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த பாரதி கோஷ், கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். மேலும் முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் முகுல் ராயுடன் அவருக்கு "ஓரளவு நல்ல உறவு" இருந்து வந்தது. முகுல் ராய் பாஜகவுக்கு தாவியவுடன், கோஷ் மற்றும் மமதா இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது..
இந்தநிலையில் நேற்று அவர் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
0 Comments