Tamil Sanjikai

பெங்களூரு மாநகராட்சியில் நேற்று ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி நிர்வாகம், 2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

நிதி நிலைக்குழு தலைவர் ஹேமலதா கோபாலையா இதை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 24 மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும்.

பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் இருப்பு தொகையாக அது வைக்கப்படும் மற்றும்15 வருடத்திற்கு பிறகு இத்தொகை குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் இந்த அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

0 Comments

Write A Comment