மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கீக்கு வழங்கப்பட்ட விருதைப் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனல் திரும்பப் பெற்றுக்கொண்டது. மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக ஆங் சான் சூ கீக்குப் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனல் கடந்த 2009-ம் ஆண்டு அம்பாசடர் ஆப் கன்சயின்ஸ் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடந்ததை, அடுத்து அவர்கள் வங்கதேசத்துக்கு அடித்து விரட்டப்பட்டது போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆங் சான் சூ கீ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு வழங்கிய விருதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஆம்னஸ்டி இன்டர்நேசனல் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments