Tamil Sanjikai

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பெங்களூரு சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலா பங்குதாரராக உள்ள அணைத்து நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 180க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்றது.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சசிகலாவின் உறவினர்களான தினகரன், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் இன்று காலை சென்ற வருமானவரி அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரிஅதிகாரி வீரராகவராவ் தலைமையில் 5 அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments

Write A Comment