Tamil Sanjikai

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் மதுமிதா. இவர் கடந்த வார இறுதியில் தன்னை தானே காயப்படுத்தி கொண்ட காரணத்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி சார்பாக மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சேனல் நிர்வாகி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளபாக்கியை விரைவில் தரா விட்டால் தற்கொலை செய்து சேது கொள்ள போவதாக மெசேஜ் அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தனது குடும்பம் மற்றும் வக்கீலுடன் செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் பொய்யானது என தெரிவித்துள்ளார். இது தவிர செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் மதுமிதா பதில் கூற மறுத்துவிட்டார். இதனிடையே விரைவில் பிக் பாஸ் நிர்வாகம் சார்பில் இந்த புகார் குறித்தான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment