Tamil Sanjikai

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின் 'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே விஜய் 64 படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்ட்டர் வெளியாகியுள்ள நிலையில் விஜயின் 64 வது படத்தில் மக்கள் செல்வன், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

0 Comments

Write A Comment