தென் மேற்கு அயர்லாந்து கடற்கரை பகுதியில் பிரகாசமான வெளிச்சமும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (பறக்கும் தட்டு?) ஒன்று, தென்பட்டதாக சொல்லப்பட்டது. குறித்து ஐரீஷ் விமான போக்குவரத்து ஆணையம் விசாரித்து வருகிறது.
அயர்லாந்து நேரப்படி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி காலை 6.47 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஷனான் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு, இந்த பகுதியில் ஏதேனும் ராணுவ பயிற்சி நடக்கிறதா?, ஏதோ ஒன்று 'அதிவேகமாக' பறந்து கொண்டிருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அதுபோல் எதுவும் பயிற்சி நடக்கவில்லை என கூறி உள்ளனர்.
அந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் விமானத்துக்கு இடது பக்கமாக வந்து வேகமாக வடக்கு நோக்கி சென்றுவிட்டது என்று கூறிய விமானி ஷனான் ஆனால் அந்தப் பொருள் மோத வரவில்லை என்று கூறியுள்ளார்.
விர்ஜின் விமானத்தின் மற்றொரு விமானி, அது விண் கல்லாகவோ, புவியின் மண்டலத்துக்கு வெளியே சென்று மீண்டும் நுழையும் ஒரு பொருளாகவோ இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அயர்லாந்தில் இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
0 Comments