நெல்லையில் டி.வி.எஸ் - எக்ஸ்.எல் வாகனத்தை மட்டும் குறி வைத்து திருடி வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை நகரில் தொடர்ந்து டி.வி.எஸ் - எக்ஸ்.எல் வாகனங்கள் திருடப்பட்டு வந்தன, இதனால் தனிப்படை அமைத்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டி.வி.எஸ் எக்ஸ்.எல் வாகனத்தை மட்டும் குறி வைத்து திருடி வந்த வல்லநாட்டை சேர்ந்த கொம்பையா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து பத்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கியர் வைத்த இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு தெரியாததால், டி.வி.எஸ் - எக்ஸ்.எல் வாகனத்தை மட்டும் திருடி வந்ததாக கொம்பையா போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
0 Comments