Tamil Sanjikai

திமுக, அமமுக இணைய வாய்ப்புள்ளதாக திமுக எம்பி, டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன், ‘தமிழக மக்களை காப்பாற்ற திமுக, அமமுக இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அதிமுக ஆட்சியை அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருப்பதுபோல் அமமுகவும் உறுதியாக உள்ளது. பொதுப் பிரச்னை என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை அகற்ற வாய்ப்புள்ளது’ என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment