Tamil Sanjikai

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் செல்ல முயன்ற பெண்கள் இருவரை கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர்.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், சபரிமலையில் 50 வயதுக்கும் குறைவான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பம்பாவில் ப.ஜ.க கட்சியினர் ,இந்து அமைப்புகளும் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷானிலா சதீஷ் ஆகியோர் சபரிமலைக்கு கோயிலுக்கு செல்ல முயன்றனர்.

நிலக்கல் பகுதியை அடைந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர், போராட்டங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த இரு பெண்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து இரண்டு பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை ரேஷ்மா, ஷானிலா இருவரும் சபரிமலைக்கு செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment