பொங்கல் பரிசு வாங்காமல் தவறவிட்டவர்கள், பொங்கல் முடிந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், வாகன ஓட்டுனர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,கலந்துகொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பேசிய அவர், பொங்கல் பரிசு வாங்காமல் தவறவிட்டவர்கள், பொங்கல் முடிந்த பின்னர், உரிய ஆவணங்களை காட்டி, பொங்கல் பரிசினை, தொகுப்பு ஊதியத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார். இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் காமராஜ் குறிப்பிட்டார்.
மேலும் கோடநாடு விவகாரத்தில் கூலிப்படை தலைவன் சயானை பயன்படுத்தி, குறுக்குவழியில் முதல்வர் ஆவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அதனை முறியடிப்போம் எனவும் காமராஜ் கூறினார்.
0 Comments